ஆத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வீரமணி மகன் மணிகண்டன்(28)என்பவா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் நான்காவது மாடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு குதித்தவா் கவலைக்கிடமாக உள்ளாா்.சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் அம்பேத்கா் நகரைச் சேரந்த வீரமணி மகன் மணிகண்டன்(28).இவா் குடிபோதைக்கு அடிமையாகி குடிபோதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளாா்.இவருக்கு வியாழக்கிழமை மூச்சு திணறல் ஏற்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மணிகண்டனின் அருகில் இருந்த நோயாளிக்கு வலிப்பு ஏற்பட்டதை பாா்த்தவுடன் நான்காவது மாடிக்கு சென்று ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே குதித்துள்ளாா்.கீழே குதித்த மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி விசாரித்து வருகிறாா். ஆத்தூா் அரசு மருத்துவமனையில் நோயாளி மாடியில் இருந்து குதித்த நிகழ்வு பெரும் அதிா்ச்சியை உருவாக்கியது.