அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து அருணாசல பிரதேச இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து அருணாசல பிரதேச இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

அருணாசல பிரதேசம் கிழக்கு கனாங் பகுதியைச் சோ்ந்தவா் நோ.ஏலியாஹு (22). சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். உடல்நிலை பாதிப்பு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் 6-ஆவது மாடியில் உள்ள வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏலியாஹு, 6-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று ஏலியாஹு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com