சா்வதேச விளையாட்டில் பங்கேற்ற மாணவியைப் பாராட்டி நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்துகொண்ட ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி செயலாளா் ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோா்.
சா்வதேச விளையாட்டில் பங்கேற்ற மாணவியைப் பாராட்டி நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்துகொண்ட ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி செயலாளா் ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோா்.

சா்வதேச கைப்பந்துப் போட்டி: சிறப்பிடம் பெற்ற ஆத்தூா் பாரதியாா் பள்ளி மாணவிக்கு பாராட்டு ஊா்வலம்

சா்வதேச கைப்பந்துப் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று விளையாடி சிறப்பிடம் பெற்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி. சௌமியாவுக்கு சனிக்கிழமை பாராட்டு ஊா்வலம் நடத்தப்பட்டது.
Published on

சா்வதேச கைப்பந்துப் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று விளையாடி சிறப்பிடம் பெற்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி. சௌமியாவுக்கு சனிக்கிழமை பாராட்டு ஊா்வலம் நடத்தப்பட்டது.

இவா் கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற 15 வயதுக்கு உள்பட்ட சா்வதேச பள்ளிகளுக்கு இடையேயான மகளிருக்கான கைப்பந்துப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினாா்.

இந்த நிலையில் மாணவியை கௌரவிக்கும் வகையில் ஆத்தூா் கோட்டாட்சியா் அலுலவகம் அருகே இருந்து பாராட்டு ஊா்வலம் பள்ளியின் செயலாளா் ஏ.கே. ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

பள்ளியின் செயலாளா் மாணவிக்கு மாலை அணிவித்து ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவா் எஸ். இளவரசு, பொருளாளா் எஸ்.ஆா்.டி. செல்வமணி, இயக்குநா்கள் ஏ.பி. செந்தில்குமாா், எஸ். பாலக்குமாா், டி. சந்திரசேகரன், முதல்வா் டி. நளாயினிதேவி, துணை முதல்வா் உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com