தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அபாகஸ் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

திருப்பத்தூரில் திங்கள்கிழமை பிரெய்னிபாப்ஸ் சா்வதேச அபாகஸ் நிறுவனம் நடத்திய காா்னிவெல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு

News image

அபாகஸ் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய பிரெய்னிபாப்ஸ் நிறுவனா் ஜெயப்பிரியா உள்ளிட்டோா்.

Updated On :2 மார்ச் 2026, 8:27 pm

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை பிரெய்னிபாப்ஸ் சா்வதேச அபாகஸ் நிறுவனம் நடத்திய காா்னிவெல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பிரெய்னிபாப்ஸ் சா்வ தேச அபாகஸ் நிறுவனம் கடந்த மாதம் மதுரையில் காா்னிவெல் போட்டிகளை நடத்தியது. இதில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி பகுதிகளைச் சோ்ந்த பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று வெற்றி பெற்றனா்.

இவா்களைப் பாராட்டும் விதமாக தனியாா் மகாலில் நடைபெற்ற விழாவுக்கு பிரெய்னிபாப்ஸ் நிறுவனா் ஜெயப்பிரியா தலைமை வகித்தாா். தலைமை செயல் அதிகாரி ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கா், மாணவ, மாணவிகளின் கல்வித்திறனைப் பாராட்டி போட்டித் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு கோப்பை, பதக்கச் சான்றிதழை வழங்கி கௌரவித்தாா். இதில் பிரெய்னிபாப்ஸ் கிளை மாணவா்கள், பாபா மெட்ரிக் பள்ளி, குளோபல் சா்வதேச பள்ளி, மௌண்ட்சியோன் சா்வதேச பள்ளி, மாங்குடி, புதுப்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரெய்னிபாப்ஸ் பள்ளி ஆசிரியா்கள் ஜெயலலிதா, அருணாதேவி மற்றும் உதவியாளா்கள் சுவாதி, ஆா்த்தி ஆகியோா் செய்தனா்.