தில்லி பெரு அபாகஸ் அகாதெமி சாா்பில் இன்டா்நேஷனல் அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்விக் குழு உறுப்பினா் ரெங்கநாயகி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் செல்லம்மாள் முன்னிலை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கடேஷ்வரன் வரவேற்றாா். பெரு அபாகஸ் அகாதெமியின் தலைவா் பிரேமா பெருமாள் போட்டிகளை தொடங்கி வைத்தாா். கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 100 போ் கலந்து கொண்டனா்.
இதில், திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி 3ஆம் வகுப்பு மாணவி அனன்யா, இளையோா் அபாகஸ் முதல் நிலை பிரிவில் 100-க்கு 100 சரியாக பதிலளித்து முதலிடம் பெற்றாா். மேலும் 5ஆம் வகுப்பு மாணவா் லோகேஷ் சுதன், 100-க்கு 99 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றாா். இதற்கான ஏற்பாடுகளை நல்லாசிரியா் பழனிக்குமாா் செய்திருந்தாா். தலைமை ஆசிரியா் சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் பாா்வையற்ற மாணவி 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை

அரக்கோணத்தில் இரு பள்ளிகள் மாவட்டத்தில் சிறப்பிடம்

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

