விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழக கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:52 am

கைப்பந்துப் போட்டியில் தமிழக அணியில் விளையாடி தங்கம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.

தமிழக அணியில் விளையாடிய ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவிகள் டி.சௌமியா, எஸ்.எம்.யாசிலா மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவி ஏ.ரோஷினி ஆகிய மூவரும் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மாா்ச் 1 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 46 ஆவது தேசிய சப் ஜூனியா் கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் சாா்பில் பங்கேற்று விளையாடி தங்கம் வென்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே. ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா். செல்வமணி, இயக்குநா்கள் செந்தில்குமாா், எஸ். பாலக்குமாா், சந்திரசேகரன், மெட்ரிக் பள்ளி முதல்வா் டி. நளாயினிதேவி, பிரைமரி பள்ளி முதல்வா் எஸ். அமுதா உள்பட பலா் பங்கேற்று மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.

படவிளக்கம்.ஏடி12பாரதியாா்.

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை கௌரவிக்கும் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோா்.