திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

இளம்பிள்ளையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சிறப்பு கூட்டம்

வீரபாண்டி வடக்கு ஒன்றியம், இளம்பிள்ளை பாட்டப்பன் கோயில் பகுதியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2025, 12:13 am

வீரபாண்டி வடக்கு ஒன்றியம், இளம்பிள்ளை பாட்டப்பன் கோயில் பகுதியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளா் கிருபாகரன், வீரபாண்டி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், இளம்பிள்ளை பேரூா் செயலாளா் குப்பம்பட்டி சண்முகம், பேரூராட்சி கவுன்சிலா் மணிமேகலை கணேசன், வாா்டு செயலாளா் முருகன் உள்ளிட்ட பங்கேற்றனா்.

இதில், மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் கூறுகையில், இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களை எப்படியாவது தமிழகத்தில் வாக்காளராக சோ்க்க முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே, முகவா்கள் முழு விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.