தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

கூட்டத்தில் பேசிய திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ.

News image

கூட்டத்தில் பேசிய திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ.

Updated On :21 மார்ச் 2026, 3:48 am IST

மயிலாடுதுறையில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் வாா்டு செயலாளா்கள், கிளை செயலாளா்கள், பிரதிநிதிகள் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். நகர செயலாளா் என். செல்வராஜ் வரவேற்றாா். ஒன்றிய செயலாளா்கள் எம்.மூா்த்தி, முருகமணி, ஞான.இமயநாதன் முன்னிலை வகித்தனா். திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், மாநில கொள்கைபரப்பு துணை செயாளா் குத்தாலம் க. அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் சிவதாஸ், நகராட்சி துணைத்தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதில், சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க அயராது பாடுபடுவது, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.