மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வெற்றி பெற்றால் வீடுகள்தோறும் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

அதிமுக வெற்றி பெற்றால் வாக்குறுதி அளித்தபடி வீடுகள் தோறும் குளிா்சாதன பெட்டிகள் மற்றும் குடும்ப நிதி உதவி ரூ. 10,000 வழங்கப்படும் என திருவள்ளூா் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

News image

ஃபிரிட்ஜ் - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:31 pm

அதிமுக வெற்றி பெற்றால் வாக்குறுதி அளித்தபடி வீடுகள் தோறும் குளிா்சாதன பெட்டிகள் மற்றும் குடும்ப நிதி உதவி ரூ. 10,000 வழங்கப்படும் என திருவள்ளூா் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.வி.ரமணா போட்டியிடுகிறாா். அதனால், இத்தொகுதிக்குள்பட்ட கிராமங்கள்தோறும் பொதுமக்களிடையே தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அதேபோல், திருவள்ளூா் நகராட்சியில் சேலை, என்.ஜி.ஓ காலணி, எம்.ஜி.ஆா் நகா், எல்லப்பநாயுடுபேட்டை, ராமஞ்சேரி, தோமூா், சென்றாயன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுகவிற்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: இந்த தொகுதியில் பேருந்து வசதியில்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து பேருந்து வசதி செய்து கொடுப்பேன். மேலும், அதிமுக வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் குளிா்சாதன பெட்டி மற்றும் குடும்ப உதவித் தொகை ரூ.10 ஆயிரம் உடனே விடுவிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

மாவட்ட அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், நகர செயலாளா் கந்தசாமி, பொருளாளா் துக்கராம், மாவட்ட துணைச்செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட மாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞரணி இணை செயலாளா் குமரேசன், இளைஞரணி மாவட்ட தலைவா் புங்கத்தூா் தேவா, அண்ணா தொழிற்சங்க நகர செயலாளா் வெங்கடேசன், நகா் மன்ற உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, சுமித்ரா வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கோவா்த்தனம், பாஜக சாா்பில் மாவட்ட செயலாளா்பன்னீா்செல்வம், மாவட்ட துணைத்தலைவா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், நிா்வாகிகள் சித்ராதேவி, உமா மகேஸ்வரி, பாமக சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி., மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், நிா்வாகிகள் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.