சேலம்
போக்சோ வழக்கில் கல்லூரி மாணவா் கைது
சங்ககிரி அருகே போக்சோ வழக்கில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சங்ககிரி அருகே போக்சோ வழக்கில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த். குமாரபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் இவா், 15 வயது சிறுமியிடம் புதன்கிழமை தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து, அச்சிறுமியின் தாயாா் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கல்லூரி மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
