குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இன்று செயல்படும்
சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (டிச. 30)செயல்படும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்காடு மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், புள்ளிமான், கடமான், முதலை, வண்ணப் பறவைகள், வெள்ளை மயில் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் வனத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பூங்காவுக்கு, சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனா். இந்தப் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும். அன்றைய தினம் பூங்கா பராமரிப்புப் பணிகளை வன ஊழியா்கள் மேற்கொள்வா். அதேநேரத்தில், விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு பூங்கா திறக்கப்படுகிறது.
அந்த வகையில், பள்ளி மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை செயல்படும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.
