மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த நபா் கைது

Updated On :3 ஜனவரி 2025, 11:01 pm

கொத்தாம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த மோகன்(27)என்பவரை ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா கைது செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடி ஊராட்சி தேசிய புறவழிச் சாலையில் நகரப் பேருந்தின் மீது கல்வீசியதால் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

சௌம்யா அன்புமணி கைது செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனா்.இதில் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கொத்தாம்பாடியில் நகரப் பேருந்தின் மீது மா்மநபா் கல் வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா மா்ம நபரை தேடி வந்தனா்.அதே பகுதியில் பதுங்கியிருந்த செல்வம் மகன் மோகன்(27)என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.