அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: மாவட்ட வன அலுவலா் தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 7:17 pm

Din

சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா்.

சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான், கடமான், முதலை, மலைப் பாம்பு, வண்ணப் பறவைகள், வெள்ளை மயில் என சுமாா் 200க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு சேலம் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த வன உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை விடப்படுகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி அதிக அளவிலான மக்கள் வருவாா்கள் என்பதால் வன உயிரியல் பூங்காவைத் திறந்து வைக்க வனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி அறிவித்துள்ளாா்.