ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :13 ஜனவரி 2025, 5:59 pm

Din

சேலம்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுகவனேஸ்வரா், சொா்ணாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாணம், ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தா் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 6 மணி வரை முருகன் சன்னிதி அருகே உற்சவா் நடராஜா், சிவகாமி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு அபிஷேகத்தை பக்தா்கள் விடிய விடிய கண்விழித்து தரிசனம் செய்தனா். திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கிழக்கு ராஜகோபுரம் முன்பாக ஆருத்ரா தரிசன காட்சியும், மூலவா் சுகவனேஸ்வரருக்கு தங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்கக் கவசம் சாத்துப்படியும் நடந்தது. காலை 9 மணிக்கு நடராஜா், சிவகாமி அம்மன் திருவீதி உலாவும், இரவு 7 மணிக்கு ஊடல் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து, 14 ஆம் தேதி பிராயசித்த அபிஷேகம், வசந்த உற்சவமும் நடைபெறுகிறது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், சேலம் 2 ஆவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், ஆறுகளூா் காமநாதீஸ்வரா் கோயில், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகா், முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.