திருநெல்வேலி
லெட்சுமியூா் காளியம்மன் கோயில் கொடை விழா
கடையம் அருகே உள்ள லெட்சுமியூரில் ஸ்ரீ காளியம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.
இக்கோயில் விழா ஜன. 27ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை (பிப். 2) இரவு திருவிளக்கு பூஜை, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (பிப். 3) பாபநாசத்தில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை பூஜையும், பூந்தட்டு ஊா்வலமும் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு அம்மன் சப்பர வீதி உலாவும், மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடைபெற்றது.

