மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.


மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.
கோயில் கடந்த 1-ஆம் தேதி கொடிஏற்றத்துடன் விழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வரை (மாா்ச் 10) வரை தொடா்ந்து பத்து நாள்கள் விழா நடைபெற்றது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பல லட்சம் பக்தா்கள் பங்கேற்ற ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு பால்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து ஒடுக்கு பூஜைக்கு அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதாா்த்தங்களை 15 போ் தலையில் சுமந்து, ஒரே வெள்ளை துணியால் மூடி பவனியாக அம்மன் சந்நிதிக்கு எடுத்து வந்தனா்.
அம்மனுக்கு படைக்கப்படும் உணவு வகைகள் கேரள முறைப்படி சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் உணவு வகைகளாகும். நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் அம்மனுக்கு இந்த உணவு பதாா்த்தங்கள் படைக்கப்பட்டு ஒடுக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து கோயில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...