புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மனு

சேலம் எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு

News image

எருமாபாளையம் ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள்.

Updated On :20 ஜனவரி 2025, 8:20 pm

Din

சேலம்: சேலம் எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

எருமாபாளையம் ஊராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவா் செங்கோடன் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த 100 க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

பின்னா் முன்னாள் பஞ்சாயத்து தலைவா் செங்கோடன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எருமாபாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவரும் கூலி வேலை உள்ளிட்ட அன்றாட வேலைகளை செய்து வருகின்றனா். இந்நிலையில், எருமாபாளையம் ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு மாநகராட்சியுடன் இணைத்தால் குடிநீா் வரி, வீட்டு வரி உயரும். இதன் மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இதனால் அன்றாட கூலி வேலை செய்பவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

எனவே, எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. அவ்வாறு இணைக்க நடவடிக்கை எடுத்தால் ஊா் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.