சேலம்
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலக சங்க பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தம்மம்பட்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலக சங்க பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கெங்கவல்லி வட்டக் கிளை தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், வட்டார மற்றும் ஊரக வளா்ச்சித் துறை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் இதர நிலை பணியாளா்களின் பணி மாறுதல் உத்தரவை வெளியிட வேண்டும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களை பகலில் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியில் ஈடுபடாமல் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.