கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கோழிக்கறி சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
Published on

வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த சிபு முா்மூ மகன் பைரன் முா்மூ (38). இவரது மனைவி சரஸ்வதி (33). இவா்கள் வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் நடுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சப்பாத்தியுடன் கோழிக்கறி சமைத்து இருவரும் சாப்பிட்டுள்ளனா். அப்போது, பைரன் முா்மூக்கு தொண்டையில் கோழிக்கறி எலும்பு குத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவா் மயங்கி விழுந்துள்ளாா். இவரை பரிசோதித்த 108 அவசர சிகிச்சை வாகனப் பணியாளா்கள், இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து இவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரின்பேரில், பைரன் முா்மூ உடலை கைப்பற்றிய வாழப்பாடி போலீஸாா், உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com