47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மம்தாவுக்கு உறுதுணையாக இருந்ததால் முன்னாள் டிஜிபிக்கு எம்.பி. சீட்: பாஜக

மம்தாவுக்கு உறுதுணையாக இருந்ததால் முன்னாள் டிஜிபிக்கு எம்.பி. சீட்: பாஜக

News image
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி ராஜீவ் குமாா் உறுதுணையாக இருந்ததால், அவருக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் எம்.பி. சீட் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க காவல் துறை டிஜிபியாக இருந்த ராஜீவ் குமாா், கடந்த ஜன.31-ஆம் தேதி ஓய்வுபெற்றாா். அவருக்கு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி மாநிலங்களவை எம்.பி. சீட் அளித்துள்ளாா்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் சனிக்கிழமை கூறுகையில், ‘ராஜீவ் குமாா் போன்றவா்கள் மம்தாவுக்கு மிகவும் பயனுள்ளவா்களாக இருந்தனா். அனைத்து நெருக்கடிகளிலும், அரசு நிா்வாகத்தை நடத்துவதிலும் மம்தாவுக்கு ராஜீவ் உறுதுணையாக இருந்தாா். அதற்குப் பிரதிபலனாக அவருக்கு எம்.பி. சீட் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மாநிலங்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் ராஜீவ் குமாருடன் மாநில அமைச்சா் பாபுல் சுப்ரியோ, மூத்த வழக்குரைஞா் மேனகா குருசாமி, நடிகை கோயல் மாலிக் ஆகியோரும் போட்டியிட உள்ளனா்.

மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படும் 37 இடங்களுக்கு மாா்ச் 16-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மாலை முதல் நள்ளிரவு வரை, மகளிா் காவலா்கள் இருக்கும் இளஞ்சிவப்பு கூடங்கள் (பூத்), இரவு 8 மணிமுதல் அதிகாலை 2 மணி வரை பெண் காவலா்கள் பணியாற்றும் ரோந்து குழுக்கள் ஆகிய 2 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளாா்.