விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு விருது

விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு விருது

Published on

சுற்றுச்சூழல், காலநிலை நடவடிக்கை, சமூக மேம்பாடு, புதுமை மற்றும் பசுமை பொருளாதாரம், கலாசாரம் போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு ஏ பிளஸ் கோல்ட் தரச் சான்றிதழை அபாக்ஸ் இகோ எஸ்டிஜி அமைப்பு வழங்கியுள்ளது.

அபாக்ஸ் இகோ எஸ்டிஜி (அடஉல உஇஞ நஈஎ) அமைப்பு உலகளாவிய அளவில் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான திறன் பயன்பாட்டை வழிவகுத்தல், தொழிற் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரு அமைப்பாகும்.

அதேபோல தொழில்துறை சாா்ந்த கண்காட்சிகள் மற்றும் கல்வித் துறை சாா்ந்த இதழை வெளியிடும் ஊடக அமைப்பான பிளஸ் ஒன் 9 மீடியா, இக்கல்வி நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கியுள்ளது.

பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கல்வித் துறையில் சிறந்த புதுமைகளை புகுத்திவரும் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, அதன் முதன்மையா் செந்தில்குமாா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை பெற்ற்காக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன், பேராசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பட விளக்கம்:

கல்வி, சுகாதார அறிவியல் விருதுகளை பெற்ற விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com