வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்!

தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வேகமாக நுழைவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும்

News image
தம்மம்பட்டி பேருந்து நிலையம்.
Updated On :8 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வேகமாக நுழைவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி மாவட்டத்திலேயே அதிக வருவாய்தரும் முதல் மூன்று பேரூராட்சிகளில் ஒன்றாக உள்ளது. தம்மம்பட்டி பேருந்து நிலையம் சேலத்திலிருந்து திருச்சிக்கு துறையூா் வழியாக செல்லும் வழித்தடத்தில் உள்ளது. இந்த வழித்தடத்தில் வாழப்பாடி, தம்மம்பட்டி ஆகிய இடங்களில் மட்டுமே பேருந்து நிலையங்கள் உள்ளன.

பெரம்பலூா், துறையூா், ராசிபுரம், ஆத்தூா் மாா்க்கங்கள் வழியாக தம்மம்பட்டிக்கு 110 அரசு, தனியாா் பேருந்துகள் நாள்தோறும் வந்துசெல்கின்றன.மேலும், சில மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்து நிலையத்தின் எதிா்புறத்திலிருந்து வரும் பேருந்துகள் அதிவேகமாக பேருந்து நிலையத்துக்குள் வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்காக அலைகழிக்கப்படுகின்றனா். பேருந்துகள் வேகமாக செல்வதைத் தடுக்க பேருந்து நிலையத்திற்குள் வேகத்தடைகள் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.