சேலம்
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 115.88 அடியாகக் குறைந்தது
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 116.41 அடியிலிருந்து 115.88 அடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 116.41 அடியிலிருந்து 115.88 அடியாகக் குறைந்தது.
அணையின் நீா் இருப்பு 87.05 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,456 கனஅடியில் இருந்து 6,278 கனஅடியாகக் குறைந்துள்ளது.
டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 15,000 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்நிலை மதகுகள் வழியாக 400 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.