கிருபானந்த வாரியாா் குருபூஜை

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 32-ஆவது குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 32-ஆவது குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் செங்குந்தா் மகாஜன சங்கத்தின் சாா்பில், அதன் தலைவா் கே.பி.மகாலிங்கம் தலைமையில் கிருபானந்த வாரியாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நிகழ்வில், துலுக்கனூா் தலைவா் மருதமுத்து, நடுவலூா் தலைவா் மணி, காரியக்காரா் இளங்கோ, செயலாளா் வாசு, துணைச் செயலாளா் பூபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com