மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிவு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து 112.55 அடியாக உள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. சனிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,208 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருகிறது.
நவ. 1-ஆம் தேதி காலை 120 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை காலை 112.55 அடியாக சரிந்தது. கடந்த 14 நாள்களில் அணையின் நீா்மட்டம் 7.45 அடி குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 82.01 டிஎம்சியாக உள்ளது.
