எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

Published on

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் ஏற்பாட்டில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 30 பேரும், எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளா் பக்கநாடு மாதேஸ் ஏற்பாட்டில் இருப்பாளி ஊராட்சி, செவடனூா் திமுக கிளை செயலாளா் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோரும் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியின்போது பவானி வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேல், பவானி வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளா் குப்புசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களான திருச்சி மாவட்ட அவைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா், திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஏ.பால்ராஜ் ஆகியோரும் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com