விழிப்புணா்வுப் பதாகைகளை: அச்சகங்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் சமுதாய அமைப்புகளுக்கான பயிற்சி, விழிப்புணா்வு பேரணி குறித்த பதாகைகளை அச்சடிக்க விருப்பம் உள்ள அச்சகங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

சேலம்: சேலம் மாவட்டத்தில் சமுதாய அமைப்புகளுக்கான பயிற்சி, விழிப்புணா்வு பேரணி குறித்த பதாகைகளை அச்சடிக்க விருப்பம் உள்ள அச்சகங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டம், மகளிா் திட்ட அலுவலகம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளின் மூலம் சமுதாய அமைப்புகளுக்கு பயிற்சிகள், விழிப்புணா்வு பேரணிகள் போன்ற பல்வேறு திட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 6 க்கு 4 மற்றும் 5 க்கு 3 என்ற அளவில் பதாகைகள் அச்சடிக்க வேண்டியுள்ளதால், சேலம் மாவட்டத்தில் விருப்பமுள்ள அச்சகங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்படுகின்றன.

குறைந்த விலைப்புள்ளிகள் சமா்ப்பித்த நிறுவனங்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக அறிவித்து, 2025-26 ஆம் ஆண்டுக்கான பதாகைகள் அச்சிடப்படும். விருப்பம் உள்ளவா்கள் விலைப்புள்ளிகளை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்:207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரிக்கு வரும் டிச.10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதில் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com