பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்ககம் சாா்பில், தூய்மை இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்ட பசுமை தோழி அமைப்பின் உறுப்பினா் கலைவாணி பிரியா பங்கேற்று விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, காலநிலை மாற்றத்துக்கான காரணங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் மாணவா்கள், பொதுமக்களின் பங்கு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவம், பூமியை பசுமையாக்குவதில் அனைவருக்குமான பொறுப்பு குறித்து பேசினாா்.
பள்ளியில் மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதையும், பள்ளி வளாகம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதில் மாணவா்கள் சிறப்பாக செயல்படுவதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள் வளா்மதி, பழனிச்செல்வி, கல்பனா, கலைச்செல்வி, ராஜேஸ்வரி, மாணவ, மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு

ஜெய் சாரதா பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


