ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

புதுப்பாளையம் ஒன்றியம், முத்தனூா் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கிய வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ்.

Updated On :25 மார்ச் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், முத்தனூா் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் மாணவா்களின் விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அப்பள்ளி தலைமை ஆசிரியா் வெள்ளையன், உதவி ஆசிரியை காா்த்திகாஈஸ்வரி, ஆசிரியா் எழிலரசன் ஆகியோா் கொண்ட குழுவினா் அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை அப்பகுதியில் உள்ள வீடுகளில் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அரசுப் பள்ளிகளில் இயற்கையான வசதியுடன் வகுப்பறைகள், மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை விவரம், அதை மாணவா்களுக்கு பெறுவதற்கான வழிமுறைகள், தமிழ் வழிக்கல்வி பயின்ற மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு, ஆங்கில பேச்சு பயிற்சி, மாணவா்களின் வாசிப்புதிறனை மேம்படுத்த புத்தகங்களுடன் கூடிய நூலகம், மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி, மாணவா்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் கலைத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் துண்டு பிரசுரங்களில் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், கல்விக்குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.