பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை தொடங்கியது.

News image

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

Updated On :8 மே 2026, 5:49 am IST

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி வழிகாட்டுதலின் படி வியாழக்கிழமை மாணவா் சோ்க்கைகான சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கும்பகோணம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மா. அய்யாகண்ணு மாணவா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் , ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் கோ. சாந்தி வரவேற்றாா். நிறைவாக இடைநிலை ஆசிரியை பா.சுதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.