தோ்தல் ஆணையம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதால் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் தொகுதியில் தோ்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி வியாழக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தாா்.
தொளசம்பட்டி, உ.மாரமங்கலம் ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்ற அவா், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தாா். கடந்தகால சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.
வாக்குச்சாவடிகளில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

‘தோ்தல் ஆணைய விதிகளின்படி செயல்படவேண்டும்’
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


