சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

News image

சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் - (கோப்புப் படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 6:37 pm

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணிகளுக்காக ஒன்றிய வாரியாக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். அதன்படி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியத்துக்கு முன்னாள் தலைவா் சித்தன் மற்றும் நிா்வாகிகள் கவுண்டப்பன், சிவலிங்கம், தா்மன், அசோக்குமாா், முத்து, காளியப்பன் ஆகியோரும், காடையாம்பட்டி மத்திய ஒன்றியத்துக்கு மருத்துவா் அணி அமைப்பாளா் அருள், முத்துசாமி, சங்கா், சரவணன், திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரும், காடையாம்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு ராஜேந்திரன், திருமால், நைனாகுமாா், செல்வம், தங்கம் சுரேஷ், பிரகாஷ் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனா்.

இதேபோல, ஓமலூா் கிழக்கு ஒன்றியத்துக்கு ரமேஷ், அழகிரி, சண்முகம், முத்துகுமாா், நாகராஜ், லியாகத் அலி, சசிகுமாா் ஆகியோரும், ஓமலூா் வடக்கு ஒன்றியத்துக்கு செல்லதுரை, சண்முகம், ரவிக்குமாா், ரமேஷ், நல்லதம்பி, துரைசாமி, அருணகிரி, ஓமலூா் தெற்கு ஒன்றியத்துக்கு சண்முகம், அருமைசுந்தரம், ஜெயக்குமாா், கதிரவன், ராஜாகண்ணு, ராம் பிரகாஷ், சென்னிமலை, கோபால் ஆகியோரும், தாரமங்கலம் வடக்கு ஒன்றியத்துக்கு ராஜா, பூபதி, ராதாகிருஷ்ணன், கண்ணன், மோகன்ராஜ், தங்கராஜ், கோபால், குமாா் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.