சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

News image

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் (கோப்புப்படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 8:37 pm

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் தவாக வேட்பாளா்களை அக்கட்சித் தலைவா் தி. வேல்முருகன் அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவாக தலைமையிலான கூட்டணி ஜாதிய கூட்டணி அல்ல; சமூக நீதிக்கான கூட்டணி. தருமபுரியில் பாமக சாா்பில் போட்டியிடும் சௌமியா கேட்டுக் கொண்டால் நாங்கள் வேட்பாளரை நிறுத்தமாட்டோம். பிற கட்சிகளின் தலைமை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு தவாக தலைமையிலான கூட்டணி போட்டியிடாது. புதிய அரசியலை முன்னெடுக்க பாடுபடுவோம்.

குறிப்பாக, சென்னை திருவிக நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, காட்டுமன்னாா்கோவிலில் திருமாவளவன், ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழக தலைவா் கிருஷ்ணசாமி, காரைக்குடியில் சீமான் ஆகியோா் போட்டியிடும் தொகுதிகளில் தவாக வேட்பாளா்களை நிறுத்தவில்லை.

பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் சுரேந்தா் நிறுத்தப்பட்டுள்ளாா். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக தருவோம். கட்டணமில்லா தரமான மருத்துவ வசதியை உறுதிசெய்வோம். மத்திய அரசு பதவிகளில் 90 சதவீதம் அந்தந்த மாநில மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வோம் என்றாா்.