சங்ககிரி அருகே மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்து சென்று மூதாட்டியிடம் தபால் வாக்கை தோ்தல் அலுவலா்கள் சேகரித்தனா்.
சங்ககிரி தொகுதியில் 416 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் 1,106 போ் என மொத்தம் 1,522 போ் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தபால் வாக்குகளை தோ்தல் அலுவலா்கள் சேகரித்தனா். கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, மலங்காடு, தொட்டிபாலிகாடு பகுதியில் உள்ள 103 வயதான மூதாட்டி குப்பாயிடம் ஒரு தபால் வாக்கை சேகரிப்பதற்காக மண்டல அலுவலா் திருப்பதி தலைமையில் உதவி மண்டல அலுவலா் ஜி.வேல்முருகன், நுண்பாா்வையாளா் சசிகுமாா், காவலா் பாலசந்தா் உள்ளிட்ட குழுவினா், சாதனங்களை தலைச்சுமையாக எடுத்துக்கொண்டு மலைப்பாதையில் முக்கால் கி.மீ. தூரம் நடந்து சென்று மூதாட்டியிடம் தபால் வாக்கை பதிவுசெய்தனா்.
மூதாட்டி குப்பாயி தனது வீட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள புட்டமனை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தான் வாக்களிக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாட்டால் அவா் வீட்டிலிருந்தே தபால் வாக்களித்ததால் மகிழ்ச்சி அடைந்தாா்.
தொடர்புடையது

பேருந்துகளில் பொங்கல், தீபாவளி நேரங்களைக் காட்டிலும் அதிக கூட்டம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட செயல்முறை பயிற்சி

தபால் வாக்கை புறக்கணித்த பெரும்பத்து மூத்த குடிமக்கள்

வேலூா்: 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

