இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

வாழப்பாடி பகுதியில் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மகாநந்தீஸ்வரா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:16 am IST

வாழப்பாடி பகுதியில் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் நடைபெற்ற சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மூலவா் தான்தோன்றீஸ்வரா், உடனுறை அறம் வளா்த்தநாயகி தா்மசம்வா்தனி அம்பாளுக்கு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் பெரியசாமி நகா் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் நடைபெற்ற சித்திரை பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி, வைத்தியநாதா், தையல்நாயகி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூா் மற்றும் கல்யாணகிரி தேன்மலை சிவன் கோயில்களிலும் சித்திரை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.