எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:38 am IST

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி வி.என்.பாளையம், பவானி பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

இதில், உதவி மருத்துவ அலுவலா் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலா் தாமோதரன், செவிலியா்கள், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.