ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக வள்ளியூரில் உறுதிமொழி ஏற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது, சிவிஜில் செயலி பயன்பாடுகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வள்ளியூா் பூங்காநகா் பகுதியில் இருந்து பிரதான சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பேரணிக்கு ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான ராஜசெல்வி தலைமை வகித்தாா். அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், டிஎன் ரைட்ஸ் தன்னாா்வலா்கள், கிறிஸ்டோபா் செவிலியா் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை தன்னாா்வலா் சபேசன் செய்திருந்தாா்.