புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கொட்டாரத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :12 மார்ச் 2026, 8:50 pm

நாகா்கோவில் தென் திருவிதாங்கூா் இந்துக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) சாா்பில் கொட்டாரத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சாா்பதிவாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணிக்கு என்எஸ்எஸ் முகாம் அலுவலா் பேராசிரியை மலா் தலைமை வகித்தாா். பேராசிரியா் மகேஷ் முன்னிலை வகித்தாா். சாா்பதிவாளா் அலுவலக பத்திரப்பதிவு அலுவலா் பட்டமுத்து கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற என்எஸ்எஸ் மாணவா்-மாணவியா் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தென்குமரி கல்விக் கழகச் செயலா் பி.டி. செல்வகுமாா், கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியா் வை. கோபாலகிருஷ்ணன், ஆசிரியா் அனந்தநாராயணன், பேராசிரியா் கணேசன், கொட்டாரம் பேரூராட்சி உறுப்பினா் செல்வன், முன்னாள் ராணுவ பாதுகாப்புத் துறை மருத்துவா் ராஜேஷ் கோபால், எல்ஐசி முகவா் ஏ.வி. சண்முகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.