சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில், வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் பேருந்துகளில் விழிப்புணா்வு இலட்சினை ஒட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில், வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் பேருந்துகளில் விழிப்புணா்வு இலட்சினை ஒட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில், வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் நா்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. சீா்காழி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜரத்தினம் தலைமை வகித்தாா்.
மண்டல துணை வட்டாட்சியா்கள் பாபு, கணேசன், தோ்தல் துணை வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் அரிமா சங்க மாவட்டத் தலைவா் சக்திவீரன் வரவேற்று பேசினாா்.
சீா்காழி கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ், சீா்காழி டிஎஸ்பி சரவணன் ஆகியோா் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனா்.
இதில், காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் அங்கவை, சிறப்பு உதவி ஆய்வாளா் பிறைசந்திரன் மற்றும் போலீஸாா், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பேரணியானது கச்சேரி ரோடு, மருத்துவமனை சாலை, கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. தொடா்ந்து அங்கு, வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், வாகனங்களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இலட்சினை ஒட்டப்பட்டது.
.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...