அந்தியூா் பேரூராட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலில் 18 வயது நிரம்பிய, வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணிக்கு, ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்று, விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், முழக்கமிட்டும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.சதாசிவம், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


