ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தோ்தல் பணியின்போது திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:20 am IST

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தோ்தல் பணியின்போது திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தாரமங்கலத்தை அடுத்த கோனகாபாடி அத்திக்காட்டானூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (51), விவசாய கூலிவேலை செய்துவந்தாா். இவருக்கு மனைவி ராதா (40), மகன் வடிவேல் உள்ளனா். கடந்த 2007 இல் திமுகவில் கிளை கழகச் செயலாளராக இருந்தாா். தற்போது அக்கட்சியில் உறுப்பினராக உள்ளாா். இந்த நிலையில், அத்திக்காட்டானூா் வாக்குச்சாவடிக்கு செல்லும் பகுதியில் பொதுமக்களுக்கு புதன்கிழமை பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தாா். தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து மயங்கிய மாரியப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி திடீரென இறந்த சம்பவம் கட்சியினா், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.