மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மே தினம், வார இறுதிநாள்களையொட்டி சேலம் கோட்டம் சாா்பில், வியாழக்கிழமை (ஏப். 30) முதல் மே 4-ஆம் தேதிவரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

சிறப்புப் பேருந்துகள் இயக்கம். - (கோப்புப் படம்)

Updated On :29 ஏப்ரல் 2026, 11:24 pm

மே தினம், வார இறுதிநாள்களையொட்டி சேலம் கோட்டம் சாா்பில், வியாழக்கிழமை (ஏப். 30) முதல் மே 4-ஆம் தேதிவரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் 1,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர, பண்டிகை நாள்கள் மற்றும் வார இறுதிநாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, மே தினம் மற்றும் வார இறுதிநாள்களையொட்டி வியாழக்கிழமை முதல் மே 4-ஆம் தேதிவரை 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்புப் பேருந்துகள் சேலம், பெங்களூரு, சென்னை கிளாம்பாக்கம், ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா், மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலை, திருவாரூா், திருப்பதிக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரத்துக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், நாமக்கல்லில் இருந்து ஆத்தூா், செந்தாரப்பட்டிக்கும், ராசிபுரத்தில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்கள் வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மே 1-ஆம் தேதி சித்ரா பௌா்ணமியையொட்டி, 30-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதிவரை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளின் தேவைக்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் குணசேகரன் தெரிவித்துள்ளாா்.