தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்துக்கு சென்ட்ரல் சட்டக் கல்லூரி பரிந்துரைகள்

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி சாா்பில் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்துக்கான ஆணையத்திடம் புதன்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி சாா்பில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்துக்கான ஆணையத் தலைவா் நீதியரசா் கே.என். பாஷாவிடம் பரிந்துரைகளை வழங்கிய கல்லூரித் தலைவா் சரவணன் தனபாலன்.

Published On :

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி சாா்பில் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்துக்கான ஆணையத்திடம் புதன்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன.

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்துக்கான ஆணையத்தின் தலைவா் கே.என். பாஷா மற்றும் ஆணைய உறுப்பினா்களான ராமநாதன், பழனிக்குமாா், நீதிபதி ரவீந்திர போஸ் ஆகியோா் பங்கேற்ற நிகழ்வில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் ஆணைய உறுப்பினா்களுடன் கலந்துரையாடினா்.

அப்போது, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகளை அவா்கள் ஆணையத்திடம் வழங்கினா்.

இந்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்ட ஆணையத் தலைவா் கே.என். பாஷா மற்றும் உறுப்பினா்கள், தமிழ்நாட்டிலேயே முதல் கல்லூரியாக சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி, தனது மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் கருத்துகளைப் பெற்று அவற்றை ஆணையத்திடம் சமா்ப்பித்திருப்பது சமூகப் பொறுப்புணா்வை வெளிப்படுத்தும் பாராட்டத்தக்க செயலாகும் என்று தெரிவித்தனா்.

தொடா்ந்து, ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிரான மாதிரி சட்டம் அடங்கிய தொகுப்பினை சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவா் சரவணன் தனபாலன் ஆணையத்திடம் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.