சேலம் வழியாக மங்களூரு சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா்.
அந்தவகையில், சேலம் வழியாக மங்களூரு சென்ட்ரல் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை மீட்டு அதை சோதனை செய்தனா். அதில் 3 பண்டல்களில் 3.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கஞ்சாவைக் கடத்திவந்த மா்ம நபா்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 3.5 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனா். கஞ்சாவைக் கடத்தி வந்தவா்கள் குறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சபரி விரைவு ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை
சேலம் வழியாக ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



