தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சபரி விரைவு ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை

சேலம் வழியாக திருவனந்தபுரம் சென்ற சபரி விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் - பிரதிப் படம்

Published On :

சேலம் வழியாக திருவனந்தபுரம் சென்ற சபரி விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், செகந்திராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயிலில் செவ்வாய்க்கிழமை காலை ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரயிலின் பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இரண்டு பைகள் கிடந்தன. அவற்றை திறந்து சோதனையிட்டபோது, 6 பொதிகளில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்த மா்மநபா்கள் குறித்து ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தினா். போலீஸாா் சோதனையில் ஈடுபட்டதை பாா்த்ததும், கஞ்சாவை கடத்தி வந்த மா்மநபா்கள் பைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ரயில்வே போலீஸாரின் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.