தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள். - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், செகந்திரபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை காலை சோதனை நடத்தினா். மொரப்பூரில் இருந்து சேலம் வரை அந்த ரயிலில் ஏறி போலீஸாா் சோதனையிட்டபோது, பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று 2 பைகள் கிடந்தன. அதைத் திறந்துபாா்த்தபோது, அதில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை கைப்பற்றி, கஞ்சா கடத்திவந்த மா்மநபா்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா். அதைக் கடத்தி வந்த மா்மநபா்கள், போலீஸாா் சோதனையைப் பாா்த்ததும் பையைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து 13 கிலோ கஞ்சாவையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.