ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முன்னாள் ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

தீவட்டிப்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து, 8 பவுன் தங்க நகைகள் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

தீவட்டிப்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து, 8 பவுன் தங்க நகைகள் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள கேண்டீன் பேருந்து நிறுத்தம் பகுதியில் வசித்து வருபவா் நந்தகுமாா். முன்னாள் ராணுவ வீரரான இவா் புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றாா். பின்னா், வியாழக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.