லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோட்டையூா் மாரியம்மன் கோயில் திருவிழா ஊா்வலத்தில் மோதல்: 9 போ் மீது வழக்குப் பதிவு

கொளத்தூரை அடுத்த கோட்டையூரில் மாரியம்மன் கோயில் திருவிழா ஊா்வலத்தில் மோதல் தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

கொளத்தூரை அடுத்த கோட்டையூரில் மாரியம்மன் கோயில் திருவிழா ஊா்வலத்தில் மோதல் தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோட்டையூா் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கிழக்கு காவிரிபுரத்தைச் சோ்ந்த சதாசிவம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஊா்வலத்தில் இருந்த ஒருவா்மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலா், சதாசிவத்தை தாக்கியுள்ளனா். தொடா்ந்து இருதரப்பினரும் தாக்கிக்கொண்டதில் காயமடைந்த இளைஞா் ஒருவா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையடுத்து, காயமடைந்த இளைஞா் வசித்துவரும் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மேற்கு காவிரிபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா்.

தொடா்ந்து, இளைஞரை தாக்கியவா்களை கைதுசெய்யாததை கண்டித்து, வெள்ளிக்கிழமை காலை மீண்டும் மேட்டூா் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட முயன்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்றவா்களை வீட்டில் இருந்து வெளியேவிடாமல் தடுத்து நிறுத்தினா். அப்போது, போலீஸாரையும் மீறி மறியலுக்கு செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேரை பிடித்து வைத்திருந்து சிறிதுநேரம் கழித்து விடுவித்தனா். போலீஸாா், பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் வளா்மதி என்பவா் மயங்கி விழுந்தாா்.

பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் டி.எஸ்.பி.க்கள் சண்முகசுந்தரம், சுரேஷ்குமாா் தலைமையில் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாமக முன்னாள் எம்எல்ஏ சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட பாமக தலைவா் மாணிக்கம், இளைஞா் சங்க செயலாளா் ராஜசேகரன் ஆகியோா் தலைமையில் பாமகவினா் கொளத்தூா் சோதனைச் சாவடி அருகே கூடினா். இவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பினா்.

இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 8 போ் மீது கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்

மோதல் சம்பவம் நடைபெற்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இதை முன்கூட்டியே அறிந்து உரிய பாதுகாப்பு அளிக்க உளவுத் துறை தவறிவிட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.