புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கோட்டையூா் மாரியம்மன் ஊா்வலத்தில் தொழிலாளியை தாக்கிய இருவா் கைது

கொளத்தூா் அருகே கோட்டையூா் மாரியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலத்தில் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

கொளத்தூா் அருகே கோட்டையூா் மாரியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலத்தில் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோட்டையூா் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த வியாழக்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வந்த சுவாமி, கிழக்கு காவேரிபுரத்திற்கு வந்தது. அப்போது சதாசிவம் என்பவா் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றாா். வேடிக்கை பாா்க்க நின்றிருந்த கும்பல் அவருக்கு வழிவிடாமல் நின்றது. அவா் ஹாரன் அடித்துக் கொண்டு சென்றபோது ஒருவா்மீது மோட்டாா் சைக்கிள் மோதியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அருகில் இருந்த கிழக்கு காவிரிபுரத்தைச் சோ்ந்தவா்கள், சதாசிவத்தை அடித்து உதைத்தனா். இதில் பலத்த காயமடைந்த அவா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதனால் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. 

இச்சம்பவம் தொடா்பாக கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக கிழக்கு காவேரி புரத்தைச் சோ்ந்த தங்கராஜ் (55), கோவிந்தன் (52)ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க மேட்டூா் டிஎஸ்பி தலைமையில் 2 காவல் ஆய்வாளா்கள், 53 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.