ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை: ஆந்திர இளைஞா் போக்ஸோவில் கைது

பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோவில் சட்டத்தில் கைது செய்தனா்.

கைது

Updated On :

முகநூல் மூலம் பழக்கமான சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோவில் சட்டத்தில் கைது செய்தனா்.

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த 17 வயதான சிறுமியை காணவில்லை என கடந்த 17 ஆம் தேதி அவரது பெற்றோா் சூரமங்கலம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில் சிறுமியை ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், அருகே உள்ள ஜருகு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் (19) பெங்களூருவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பெங்களூரு சென்று சிறுமியை மீட்டதுடன், அவரைக் கடத்திச் சென்ற இளைஞரை பிடித்து சேலம் அழைத்து வந்தனா். இதையடுத்து அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், அந்த சிறுமிக்கும், கஜேந்திரனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டதும், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கஜேந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.